துறைமுக ஆணையத்தில்‌ வேலை பார்த்து வந்த யாஹியா கான்‌ 1992ம்‌ ஆண்டு தமது சகா ஒருவருடன்‌ அதை விட்டு வெளியேறி பிக்‌ஃபுட்‌ லாஜிஸ்டிக்ஸ்‌ என்னும்‌ நிறுவனத்தை தோற்றுவித்தார்‌. அப்பொழுது அவருக்கு 27 வயது மட்டுமே ஆகியிருந்தது. இந்தப்‌ பதிமூன்று ஆண்டுகளில்‌ தனது நிறு வனத்தை ஈடு இணையற்ற ஒன்றாக வளர்த்துள்ளார்‌. இத்‌ தனைக்கும்‌ அவருடன்‌ சேர்ந்து அந்த நிறுவனத்தைத்‌ துவக்‌கிய அவருடைய பங்காளி அதை ஆரம்பித்த மூன்று ஆண்டு களிலேயே அவரைப்‌ பிரிந்து சென்றுவிட்டார்‌. தனியாக நின்று சமாளித்து தனது தொழிலை வளர்த்த விதம்‌, அதில்‌ அவர்‌ காட்டிய முனைப்பு பெரிதும்‌ மெச்சத்‌ தக்கது.

திரு கண்ணப்ப செட்டியார்‌ ஸ்டான்ஸ்‌ஃபீல்ட்‌ ம்‌ கல்வி நிறுவனங்களை 1994ம்‌ ஆண்டு துவங்கி கடந்த ரு ஆண்டுகள்‌ கல்வி அமைச்சி‌ன்‌ ஒப்புதல்‌ பெற்ற நான்கு கலவிக்கூடங்களை நிறுவி தற்‌ பொழுது வெளிநாடுகளில்‌, குறிப்பாக இந்தியாவில்‌, விரிவு படுத்தும்‌ அளவிற்குத்‌ தனது கல்விச்‌ சேவையை மேம்படுத்‌தியுள்ளார்‌.

உணவு மற்றும்‌ பானங்கள்‌ தொழிலை 1992ல்‌ துவக்கிய இவர்‌ ஒரு கடையில்‌ ஆரம்பித்து இன்று பதினோரு கடைகளாக வளர்ச்சி அடைய வைத்‌திருக்கிறார்‌. சார்ஸ்‌ நோய்‌ சிங்கப்பூரைத்‌ தாக்கி இவருடைய தொழிலில்‌ பெரும்‌ பாதிப்பை உண்டு . பண்ணிய போதிலும்‌ மனம்‌ தளராது முயற்சி செய்து அதையே ஒரு சவாலாக ஏற்றுக்‌ கொண்டு மீண்டும்‌ தனது தொழிலை லாபம்‌ ஈட்டும்‌ நிலைக்குக்‌ கொண்டு வந்தார்‌... கடந்த மூன்று ஆண்டுகளில்‌ மட்டும்‌ இவரது தொழில்‌ மும்மடங்கு லாபத்தை ஈட்டியுள்ளது.

சோதனைகளை சாதனைகளாக்கிய தொழில் அதிபர்கள்