வர்த்தக படிப்பு தொடர இந்தியர்களுக்கு உதவி

சிங்கப்பூர் இந்தியர்களும் மலாய்க்காரர்களும் வர்த்தகம் சம்பந்தப்பட்ட துறைகளில் கல்வியை தொடர்வதற்காக ஸ்டான்ஸ்ஃபீல்ட் வர்த்தகப் பள்ளி சிங்கப்பூர் இந்தியர் மேம்பாட்டுச் சங்கத்திற்கும் (சிண்டா) மெண்டாக்கிக் கும் 1.3 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள கல்வி உபகாரச் சம்பளங்களை வழங்க சனிக்கிழமை ஒப்புக்கொண்டது. மொத்தம் 102 பேருக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு .இந்த உபகாரச் சம்பளம் வழங்கப்படும்.

அமர்ந்திருப்பவர் (இ-வ) : மெண்டாக்கி அதிகாரிகள், பிரேடல் ஹைட்ஸ் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் கோ சூன் காங் (மூன்றாமவர்), ஸ்டான்ஸ்ஃ பீல்ட் வர்த்தகப் பள்ளியின் நிர்வாக இயக்குநர் திரு கண்ணப்பன் செட்டியார், சிண்டாவின் நிர்வாகக் குழு தலைவர் திரு எஸ் தனபாலன் மற்றும் சிண்டா அதிகாரிகள்.