அனைவருமே பட்டதாரிகளாக வேண்டும்‌

2002ம்‌ ஆண்டூக்கான தொழில்‌ முனைவர்‌ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட திரு கண்ணப்பன்‌ செட்டியார்‌

“இந்தியாவில்‌ வறுமையான குடும்பத்தில்‌ பிறந்த என்‌ தந்தை யார்‌ சிங்கப்பூர்‌ வந்து, எடு பிடிபையனாகத்‌ தம்‌ வாழ்க்கையைத்‌ தொடங்கி வழக்கறிஞராக வாழ்க்‌ந வில்‌ ண்கள்‌. வியின்‌ முக்கியத்துவத்தை அது எனக்குப்‌ புரிய வைத்தது” எனக்‌ கூறினார்‌ இவ்வாண்டுக்கான தொழில்‌ முனைவர்‌ விருதுக்குப்‌ பரிந்துரைக்‌கப்பட்ட பத்துப்‌ பேருள்‌ ஒருவரான ஸ்டான்ஸ்‌ஃபீல்டு வர்த்தகப்‌பள்ளியின்‌ தலைவரும்‌ தலைமை கல்வி அதிகாரியுமான திரு கண்ணப்பன்‌ செட்டியார்‌. தொழில்‌ முனைவர்‌ விருது 2002 ஆண்டுதோறும்‌ நடைபெற்று வரும்‌ இந்த நிகழ்ச்சியை சிறு நடுத்‌தர நிறுவனங்களின்‌ சங்கம்‌ நேற்று முன்தினம்‌ ரிட்ஸ்‌ கார்ல்டன்‌ ஹோட்டலில்‌ விமரிசையாக நடத்‌திற்று. அதில்‌ சிறப்பு விருந்தினராகக்‌ கலந்து கொண்டவர்‌ வர்த்தக,தொழில்‌ அமைச்சரான பிஜி ஜார்ஜ்‌ இயோ. கிடைக்கப்பெற்ற சுமார்‌ 200க்‌கும்‌ மேற்பட்ட நியமனங்களில்‌ இருந்து பத்து பேர்‌ விருதுக்குப்‌பரிந்துரைக்கப்பட்டு, அவர்களுள்‌ இருவர்‌ நேற்று முன்‌ தினம்‌ விருதுக்‌குரியவர்களாகத்‌ தேர்ந்தெடுக்கப்‌பட்டனர்‌.

அந்தப்‌ பத்து பேருள்‌ 40 வயது நிரம்பிய திரு கண்ணப்பன்‌ செட்டியாரும்‌ ஒருவர்‌ என்பதும்‌, அவர்‌ பிரபல வழக்கறிஞர்‌ திரு கருப்பன்‌செட்டியாரின்‌ புதல்வர்‌ என்பதும்‌குறிப்பிடத்தக்கது.பள்ளி நடத்தும்‌ மாணவர்‌ 1993ம்‌ ஆண்டில்‌ தம்‌ பள்ளியைத்‌ தொடங்கிய திரு கண்ணப்‌பன்‌ செட்டியார்‌ கடந்த ஒன்பது ஆண்டுகளாக வெற்றிகரமான முறையில்‌ அதை நிர்வகித்து வருகிறார்‌. இதனால்‌ அவர்‌ தற்போது நடத்‌தும்‌ மூன்று பள்ளிகளில்‌ பயிலும்‌ மாணவர்களின்‌ எண்ணிக்கை நாலாயிரத்திற்கு உயர்ந்திருக்கிறது என்பதும்‌ குறிப்பிட வேண்டியசாதனையே! தந்தையின்‌ வாழ்க்கையை தனக்கு ஒரு பாடமாகப்‌ போற்றி வரும்‌ திரு கண்ணப்பன்‌ செட்டியார்‌ கல்வி என்பது இன்றியமையாதது, அனைவருக்கும்‌ கிடைக்க வேண்டியது என்னும்‌ எண்ணம்‌ கொண்ட மாணவராக இன்றளவும்‌ வாழ்ந்து வருகிறார்‌.வர்த்தகத்‌ துறையில்‌ இளநிலைப்‌பட்டமும்‌, சட்டத்‌ துறையில்‌ இளநிலை, முதுநிலைப்‌ பட்டங்களும்‌ பெற்றிருக்கும்‌ திரு கண்ணப்பன்‌செட்டியார்‌, தற்போது கல்வி நிர்வாகத்‌ துறையில்‌ முதுநிலைக்‌கல்வியை மேற்கொண்டிருக்கிறார்‌ என்பதும்‌ குறிப்பிடத்தக்கது. கல்விப்‌ பணி விரிவாக்கம்‌ எது நடந்தாலும்‌ நன்மைக்கே என்னும்‌ நம்பிக்கை கொண்ட திரு கண்ணப்பன்‌ செட்டியார்‌, பொருளியல்‌ மந்த நிலையையும்‌ சாதகமாகப்‌ பயன்படுத்திக்‌ கொள்ள வேண்டும்‌ என்றும்‌ தம்‌ வெற்றியின்‌ ரகசியத்தைப்‌ பகிர்ந்து கொண்‌டார்‌.அவ்வாறே விலைகள்‌ குறைந்‌திருக்கும்‌ இந்தக்‌ காலக்கட்டததைச்‌ சாதகமாகப்‌ பயன்படுத்திக்‌ கொண்டு வெளிநாடுகளிலிருந்து தம்‌ பள்ளிக்குப்‌ படிக்க வரும்‌ மாணவர்களுக்காக முன்னாள்‌ மவுண்ட்‌ வெர்னன்‌ உயர்நிலைப்‌ பள்ளியை வாங்கி, அதை தங்கும்‌ விடுதியாக மறுநிர்மாணித்திருக்‌கிறார்‌.

அடுத்த மாதம்‌, நகர்‌ மையத்தலிருக்கும்‌ தம்‌ புத்தாக்க, தொழில்‌முனைப்பு நிலையத்தை அதிகாரபூர்வமாகத்‌ திறக்கவிருக்கிறார்‌ திரு கண்ணப்பன்‌ செட்டியார்‌. அதையும்‌ சேர்த்து மொத்தம்‌ ஐந்து நிறுவனங்களுக்குத்‌ தலைமைப்‌ பொறுப்பு வகிக்கும்‌ அவர்‌, தம்‌ அமைப்பு நடத்தும்‌ புதிய வகை பயிற்சித்‌ திட்டத்தையும்‌ அறிமுகப்படுத்தியிருக்கிறார்‌. இந்தோனீசியா, வியட்நாம்‌ அகிய நாடுகளின்‌ அரசாங்க நிரந்‌தரச்‌ செயலாளர்கள்‌, மாநில ஆளுநர்கள்‌, மேயர்கள்‌ முதலியோருக்‌கான பயிற்சித்‌ திட்டங்களையும்‌ அவரின்‌ பள்ளி நடத்தி வருகின்‌து. தொகுதிக்கு சுமார்‌ முப்பது பேர்‌ என்னும்‌ வீதத்தில்‌ மாதத்‌திற்கு இரண்டு தொகுதி அதிகாரிகளுக்கு திரு கண்ணப்பன்‌ செட்டியாரின்‌ பள்ளிகள்‌ பயிற்சி அளித்‌திருக்கின்றன என்பதும்‌ குறிப்பிடவேண்டிய செய்தியே! வெற்றி பெறப்‌ போராடுவோருக்கு நிச்சயமற்ற பொருளியல்‌ சூழலில்‌ வர்த்தகத்தில்‌ அதிக ஆர்வம்‌ கொண்ட பலர்‌ அதில்‌ ஈடுபட்டுதங்கள்‌ கைகளைச்‌ சுட்டுக்‌.கொள்‌கின்றனர்‌. எந்த வர்த்தகத்தைத்‌ தேர்ந்தெடுப்பது என்பது பற்றி அவர்களுக்கு, அவர்‌ கூறும்‌ ஆலோசனை என்ன?வர்த்தகத்தில்‌ ஈடுபடுவதற்கு முன்னர்‌ ஒருவருக்கு அதில்‌ ஈடுபடஅடிப்படைக்‌ காரணம்‌ வேண்டும்‌. அனைவருக்கும்‌ கல்வி வேண்டும்‌ என்னும்‌ நம்பிக்கை, கொள்கைதமக்கு இருந்ததைச்‌ சுட்டிய திரு கண்ணப்பன்‌ செட்டியார்‌, தேவை என்றாலும்‌ பணம்‌ என்பது தமக்குண்டாவதாகவே இருந்ததாகச்‌சான்னார்‌.

அவ்வாறு இருந்தால்‌ பணம்‌ அவ்வளவாகக்‌ கிடைக்காவிட்டாம்‌ கொண்ட கொள்கையை நிறைவேற்றினோம்‌ என்னும்‌திருப்தி ஏற்படும்‌.எனவே நாம்‌ அபரிமிதமாக நம்பிக்கை வைத்திருக்கும்‌ ஒன்‌றையே செய்யும்‌ தொழிலாகக்‌கொள்ள வேண்டும்‌.நேரம்‌ என்பதும்‌ மிகவும்‌ முக்‌கியமான ஒரு கூறு என்ற அவர்‌, ஒருவரிடம்‌ தொலைநோக்கும்‌ மிகவும்‌ சிறப்பான பொருளோசேவையோ இருந்ததாலும்‌ சந்தை அதை ஏற்றுக்‌ கொள்ளும்‌ நேரத்திற்கு அதைச்‌ சந்தைக்குக்‌கொண்டு வந்தால்தான்‌ அந்தப்‌பொருளோ சேவையோ விற்கும்‌ என்றும்‌ சொன்னார்‌. சந்தையில்‌ விற்பனை ஆகும்‌ நேரத்திற்கு முன்போ பின்போ அறிமுகமாகும்‌ எதுவுமே வெற்றி பெறாது போகும்‌ வாய்ப்பு அதிகம்‌ என்றும்‌ அவர பெயர்‌ குறிப்பிடப்பட்டு பற்றிக்‌ கருத்துரைத்த திரு கண்ணசெட்பப் தாம்‌ பின்பற்றியபாதை சரியானது என்பது ஏற்றுககொள்ளப்பட்டிருப்பது துஷ்‌! மகிழ்ச்சியைத்‌ தருவதாகட எனினும்‌ சாதிக்க வேண்டியது ஏராளம்‌ உண்டு என்றுமனார்‌ சிங்கப்பூர்‌ இந்தியர்‌ வர்த்தசபையில்‌ உறுப்பினராக இருக்கு திரு கண்ணப்பன்‌ செட்டியார்‌ “ஏது நடந்தாலும்‌ நன்மைக்கே என்னும்‌ நம்பிக்கை வேண்டும்‌ம வை நாம்‌ சாதகமாகப்‌ பயன்படுத்திக்கொள்ள வேண்‌டூம்‌. விலைகள்‌ குறைந்திருக்கும்‌ காலக்கட்டத்தில்தூன்‌ மந்த நிலை நடப்பிலிருக்கும்‌. அந்த மாதிரியான நேரத்தை நாம்‌ பயன்படுத்திக்‌கொண்டு விலை குறைந்தவற்றைக்‌ கூடுதலாக வாங்க வேண்டும்‌. மற்றவர்கள்‌ சொல்வதைக்‌ கேட்டுக்கொண்டு பலரும்‌ தங்களிடம்‌ இருப்பவற்றைக்‌ குறைவான விலைக்கோ நட்டத்திற்கோ விற்றவிடுவார்கள்‌. இந்தச்‌ சந்தர்ப்பத்தை தொழில்‌ முனைவர்கள்‌ தங்‌களுக்குச்‌ சாதகமாகப்‌ பயன்படுத்திக்‌ கொள்ளவேண்டும்‌".

- திரு கண்ணப்பன்‌ செட்டியார்‌.